இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13, 742 பேருக்கு கொரோனா


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்து 742 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன் பிரகாரம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 10 இலட்சத்து 30 ஆயிரத்து 176 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்று உறுதியான மேலும் 104 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 567 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு கோடியே 7 இலட்சத்து 26 ஆயிரத்து 702 பேர் குணமடைந்துள்ளதுடன் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 907 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: