இலங்கையர்களுக்கு 4 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் இலவசம் - WHO


கொவெக்ஸ் சலுகையின் கீழ் 4 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை நாட்டிற்கு வழங்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் இலவசமாக கிடைக்கவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபன பணிப்பாளர் நாயகத்தின் தென் கிழக்காசிய வலயத்திற்கான பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் முதல் கட்டமாக 30 வீத தடுப்பூசிகள் இம்மாத இறுதிக்குள் கிடைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகுதி தடுப்பூசிகள், பல்வேறு கட்டங்களாக நாட்டிற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலவசமாக வழங்கப்படவுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் பாலித்த அபேகோன் அறிவித்துள்ளார்.

No comments: