நேற்றுமட்டும் 497 பேருக்கு கொரோனா தொற்று - யாழில் 7 பேர் அடையாளம்


இலங்கையில் நேற்றைய தினம் (26) அடையாளம் காணப்பட்ட 497 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதில் 151 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 89 பேர் கம்பஹாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 39 பேர் மாத்தறையைச் சேர்ந்தவர்கள் என்றும் இரத்தினபுரியில் 37 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் நுவரெலியாவில் 29 பேருக்கும் கண்டியில் 27 பேருக்கும் மாத்தளையில் 23 பேருக்கும் காலியில் 17 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை களுத்துறையில் 15 பேருக்கும் குருநாகலில் 13 பேருக்கும் கேகாலை மற்றும் முல்லைத்தீவில் தலா 12 பேருக்கும் யாழில் 07 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 430 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 77 ஆயிரத்து 625 பேர் குணமடைந்துள்ளதுடன் 4 ஆயிரத்து 346 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெறறுவரும் அதேவேளை 459 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: