பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணிக்கு யாழ். மன்னர் நீதிமன்றங்கள் தடை உத்தரவு


பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான தமிழர்களின் பேரணி மன்னாருக்கும் நுழைய மன்னார் நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுதந்திர தினத்தில் இன ஒன்றுமையைக் குழப்புகின்ற வகையிலான போராட்டங்களுக்குத் தடை விதிக்கும் முகமாக 14 பேருக்கு எதிராகத் தடை பொலிஸாரினால் குறித்த தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

குறித்த தடை உத்தரவில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ். மாநகர முதல்வர் வி.மணிவன்னன், யாழ். நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 14 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பங்களை பரிசீலித்த யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம், குறித்த அகிம்சை வழிப் போராட்டத்திற்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

அந்தவகையில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று (03) முதல் நான்கு நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த முடியாது என தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

No comments: