இலங்கையில் மேலும் பலருக்கு கொரோனா தொற்று உறுதி


இலங்கையில் மேலும் 354 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 52 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இன்று (03) நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 840 பேர் பூரணமாக குணமடைந்துள்ள நிலையில் இதுவரை குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 883 ஆக அதிகரித்துள்ளது.

இதில் 5 ஆயிரத்து 839 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை ஆயிரத்து 248 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 330 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: