பொத்துவில் – பொலிகண்டி பேரணி: சிவசக்தி ஆனந்தன் மற்றும் சிறீதரனிடம் பொலிஸார் விசாரணை


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் வைத்து இன்று ஒட்டி சுட்டான் பொலிஸரினால் குறித்த வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.

நேற்று புதுக்குடியிருப்பு பொலிஸாரினாலும் அதற்கு முன்பு கிளிநொச்சி பொலிஸாரினாலும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, வவுனியா ஆகிய மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொலிஸாரினால் இவ்வாறு  விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மேலும் குறித்த பேரணி தொடர்பாக சில அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை பொலிஸார் இலக்கு வைப்பது ஏன் என்றும் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியிருந்தார்.No comments: