1000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதற்கு தீர்மானம்


தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், முதலாளிமார் சம்மேளனத்தின் ஆட்சேபனைக்கு மத்தியில், சம்பள நிர்ணய சபையில் நேற்று இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அந்தவகையில் ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதை ஆட்சேபித்து பெருந்தோட்ட நிறுவனங்கள் சார்பாக 197 ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். 

No comments: