வடக்கில் இரண்டு மாதங்களில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


வடக்கு மாகாணத்தில் இந்த வருடம் ஜனவரி மாதத்தில் 563 பேரும், பெப்ரவரி மாதத்தில் 278 பேரும் கொரோனா தொற்று நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பெப்ரவரி மாதத்தில் யாழில் 128 பேரும், மன்னார் மாவட்டத்தில் 85 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 44 பேரும், வவுனியா மாவட்டத்தில் 14 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இவர்களில் யாழ் மாவட்டத்தில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் 61 கைதிகள் அடங்குவதாகவும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் மாகாணத்தில் பெப்ரவரி மாதத்தில் 16 ஆயிரத்து 427 பேரிடம் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் தொற்றுஅடையாளம் காணப்பட்ட கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் இன்று வரை 1089 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இவர்களில் 349 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும், 376 பேர் வவுனியா மாவட்டத்திலும், 267 பேர் மன்னார் மாவட்டத்திலும், 78 பேர் கிளிநொச்சி மாவட்டத்திலும்,19 பேர் முல்லைத்தீவு மாவட்டத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரை வடமாகாணத்தில் கொரோனா தொற்றால் 5 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அதில் மன்னார் மாவட்டத்தில் மூவரும் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

Post a Comment

0 Comments