மேக்கப்பே இல்லாத புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீ திவ்யா!


தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ஸ்ரீ திவ்யா, அதற்கு பிறகு “வெள்ளைக்கார துரை“, “ஜீவா“, “காக்கிச் சட்டை”, “ஈட்டி”, “பென்சில்“ போன்ற பல படங்களில் நடித்து விட்டார்.

ஆனாலும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து  “உதா கலரு ரிப்பன்” பாடலுக்கு நடிகை ஸ்ரீ திவ்யா கொடுத்த க்யூட் ரியாக்ஷனுக்கு இன்றும் தமிழ் இளைஞர்கள் அடிமையாகவே இருக்கின்றனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதாவது தலைக் காட்டும் நடிகை ஸ்ரீ திவ்யா தற்போது தொடர்ந்து மேக்கப்பே இல்லாத தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 

மேக்கப் மீது அதிகம் ஆர்வம் காட்டாத இவர் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படமும் தமிழ் ரசிகர்களின் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தெலுங்கு சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீ திவ்யா அதற்கு பின் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து தெலுங்கு வெள்ளித் திரையில் முன்னணி இடத்தைப் பிடித்தார்.

தற்போது தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்த இவர் முதல் முறையாக நடிகர் பிருத்விராஜுடன் இணைந்து மலையாளத்திலும் கால் பதிக்க இருக்கிறார்.

மேலும் தமிழில், நடிகர் அதர்வாவுடன் இவர் நடித்த “ஒத்தைக்கு ஒத்த” திரைப்படம் தற்போது ரிலீசுக்கு காத்திருக்கிறது.

இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிசியாக இருக்கும் நடிகை ஸ்ரீ திவ்யா தற்போது தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ள மேக்கப் இல்லாத புகைப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை வெளியிட்டுள்ளனர்.
No comments: