அரசியல் வாதிகளின் கைக்கூலிகள் ஆகின்றனரா பொலிஸார்?
இலங்கை பொலிசாரிடம் சில இடங்களில் சிறப்பாக செயற்பட்டாலும் பல இடங்களில் தாம் அதே பழைய இலங்கை பொலிஸார் தான் என்பதனை அடிக்கடி நிரூபிக்கும் வகையில் உள்ளன அவர்களின் செயற்பாடுகள்.
குறிப்பாக இலங்கை அரசியல் வாதிகளின் கைப் பொம்மையாக உள்ளார்களா அவர்களின் பதவி உயர்விற்கு அரசியல்வாதிகள் கொடுக்கும் சிபாரிசினை பெற்றுக்கொள்ள பல இடங்களில் கடமை தவறுகின்றனரா? ஏனெனில் ஒரு காலத்தில் கல்வி அறிவிற்கு பெயர் போன நமது யாழ் மண் இப்பொழுது போதைப் பொருளுக்கு பெயர் போன ஊராக மாறி இருக்கிறது இதற்கு காரணம் யார் ?இவற்றை எல்லாம் பொலிஸார் ஏன் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர் ? பல ஊர்களில் இல்லாத அளவிற்கு ஏன் இவ்வளவு போதைப்பழக்கம் யாழ் இளைஞர்கள் மத்தியில்? இத்தனை கேள்விக்கும் பதில் பதிலை தேடி நம் இணையம்.
By: sulaksan
