ஒன்லைன் மூலம் மதுபான விற்பனை - காலால் திணைக்களத்தின் அறிவிப்பு


ஒன்லைன் மூலம் மதுபானங்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை நுகர்வோருக்கு வழங்கும் திட்டம் நிதி அமைச்சிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக காலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல்பொருள் அங்காடிகளில் இருந்து ஒன்லைனில் மதுபானம் வாங்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு தரப்பினரிரும் முன்வைத்துள்ளதாக அத் திணைக்களத்தின் பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.

எனவே இந்த பரிந்துரைகள் ஏற்கனவே நிதி அமைச்சிகு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும் நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: