எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பான சர்ச்சை - கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்


எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (15) கட்சித் தலைவர் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போதே அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது.

நாடாளுமன்றம் கூட்டத்தொடர் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: