149 ரன்கள் முன்னிலையுடன் மூன்றாவது நாளில் இரண்டாவது இன்னிங்சை தொடர்கின்றது தென்னாபிரிக்கா


மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நிறைவுக்கு வந்துள்ளது.

இப்போட்டியில் தனது முதலாவது இன்னிங்ஸிற்காக விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆட்ட நேரமுடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக ஜெர்மைன் பிளாக்வுட் 49 ஓட்டங்களையும் ஷாய் ஹோப் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக வியான் முல்டர் 3 விக்கெட்களையும் கேசவ் மகாராஜ், லுங்கி இங்கிடி மற்றும் காகிசோ ரபாடா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.

இதற்கு முன்னதாக தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 298 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இந்நிலையில் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ள நிலையில் 149 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸிற்காக தென்னாபிரிக்கா அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.

No comments: