போர் நிறுத்தத்திற்குப் பின்னர் காஸாவில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்

காஸா பகுதியில் ஹமாஸ் போராளிகளின் இலக்குகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

குறித்த தாக்குதல்கள் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹமாஸின் போராளிகளுக்குச் சொந்தமான தளங்கள், அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகள் இஸ்ரேலின் தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நேற்று காஸாவிலிருந்து பல பலூன்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டதால் பல தீ விபத்துக்கள் ஏற்பட்டதாக இஸ்ரேலிய தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இருதரப்பிற்கும் இடையே கடந்த மே 21 ஆம் திகதி அன்று முன்னெடுக்கப்பட்ட யுத்த நிறுத்தம் 11 நாள் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவந்தது.

அந்த தாக்குதலில் 66 குழந்தைகள் உட்பட 256 பாலஸ்தீனியர்களை உயிரிழந்ததுடன், 12 இஸ்ரேலியர்களும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: