திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழர் உயிரிழப்பு


தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த  இலங்கைத் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விடுதலையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இலங்கைத் தமிழர்களில் ஒருவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 78 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தம்மை விடுவிக்கக் கோரி குறித்த அனைவரும் 16 நாட்களாக தொடர்ச்சியாக  போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், திருச்சி சிறப்பு முகாமில்  தடுத்து வைக்க்பட்டிருந்த மட்டக்களப்பை சேர்ந்த 52 வயதான நபர் ஒருவர் சுகயீனம் காரணமாக திருச்சி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த  மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தமிழக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: