முகக்கவசம் அணியாமல் பொது நிகழ்வில் வடக்கு ஆளுநர்!


நாமல் ராஜபக்ஷவின் யாழ் விஜயத்தின்போது அங்கு சென்றிருந்த வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் முகக்கவசம் அணியாமல் கலந்து கொண்டிருந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.


நேற்று ஞாயிற்றுக்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணதிற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.


இந்நிகழ்வில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது வடக்கு மாகாண ஆளுநர் கலந்து கொண்டமையை அவதானிக்க முடிந்தது.


தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக முககவசம் அணிவது நாட்டில் கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு அதனை கடைபிடிக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


நாடளாவிய ரீதியில் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் தனிமைப்படுதல் விதிமுறைகளை மீறியமைக்காக கைது செய்யப்படுவதுடன் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments: