அப்பாவை விடுதலை செய்யுமாறு நாமலிடம் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் வேண்டுகோள்


யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்சவை அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் சந்தித்துள்ளனர்.


வடமராட்சியின் முள்ளி பகுதியில் இடம்பெற்ற சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறப்பு விழாவிற்கு வந்தபோதே நாமல் ராஜபக்ஷவை ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் சந்தித்துள்ளனர்.


இந்த சந்திப்பின்போது தமது தந்தையை விடுதலை செய்யுமாறு, ஆனந்த சுதாகரின் மகன் கவிரதன், மகள் சங்கீதா ஆகியோர் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.


அதேவேளை அரசியல் கைதிகளின் உறவுகளும் அண்மையில் விடுதலையான அரசியல் கைதிகளும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்திருந்தனர்.


இதன்பின்னர் கருத்து தெரிவித்திருந்த அமைச்சர் நாமல், காணாமல்போனோர் தொடர்பான விடயத்தை ஊடகங்களில் கருத்து தெரிவித்து, அரசியலாக்கக்கூடாது என கோரிக்கை விடுத்தார்.


காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் நீண்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று பல ஆண்டுகள் ஆகின்றன என்றும் இது தொடர்பில் சிறந்த தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

No comments: