மத்திய கிழக்கில் இருந்து இலங்கைக்குள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நிபந்தனைகளுடன் நீக்கம்


சில மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கை வருவதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை தொடர்பான அறிவித்தல் நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளது.


ஜூலை 01 முதல் கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, ஓமான், பஹ்ரைன் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.


குறித்த நாடுகளுக்கு 14 நாட்களுக்குள் பயணித்த பயணிகள், ஜூலை 01 முதல் 13 வரை இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என நேற்று அனைத்து விமான சேவைகளுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.


ஆயினும் தற்போது பி.சி.ஆர். தொடர்பான சில நிபந்தனைகளுடன் அத்தடை மீளப் பெறப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

No comments: