பாலியல் தொழிலுக்காக 15 வயது சிறுமி விற்பனை: துறவி ஒருவர் உட்பட 17 பேர் கைது


ஒன்லைனில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்த குற்றச்சாட்டில் துறவி ஒருவர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகம் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


அண்மையில் கல்கிசையை சேர்ந்த ஒருவர் குறித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒருவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


குறித்த சிறுமி சுமார் மூன்று மாதங்களுக்கு தலா 10,000 ரூபாய், 15,000 ரூபாய் மற்றும் 30,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் சிறுமியின் தாய், விற்ற நபர், இரண்டு முச்சக்கர வண்டி மற்றும் கார் ஓட்டுநர்கள், ஒவ்வொரு இடத்திற்கும் சிறுமியை அழைத்துச் சென்றவர் மற்றும் சிறுமியை விற்ற விளம்பரத்தை பதிவிட்டவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


விசாரணையைத் தொடர்ந்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சுமார் 20 பேரின் விவரங்கள் குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார்.

No comments: