மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா பொதுமன்னிப்பில் விடுதலை


UPDATE :மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா பொதுமன்னிப்பில் விடுதலை.UPDATE :மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அறியமுடிகின்றது.

அவரை விடுதலை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும்  இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் அவர் விடுவிக்கப்படுவார் என சட்டத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த துமிந்த சில்வா உட்பட ஐந்து பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த 216 இல் மரண தண்டனை தண்டனை வழங்கியது.

இந்நிலையில் அவர் இன்று ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூரணை தினத்தை முன்னிட்டு முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் 16 பேர், சிறு குற்றங்களில் ஈடுபட்ட 77 பேர் உட்பட மொத்தம் 93 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசாங்க தரப்பில் இருந்து கடந்த நாடாளுமன்ற அமர்வில் முன்வைக்கப்பட்டது.

அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவும் துமிந்த சில்வாவை விடுவிக்க பரிந்துரைத்தது.

ஏற்கனவே துமிந்த சில்வாவை பொது மன்னிப்பில் விடுவிக்க கடந்த ஆண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: