மைத்திரியை தொடர்ந்து வெள்ளிக்கிழமையை தேர்ந்தெடுத்தார் ஜனாதிபதி கோட்டா


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் விசேட உரை அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகள் ஊடாகவும் ஒலி/ஒளிபரப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெள்ளிக்கிழமைகளில் விசேட அறிவிப்புகளை வெளியிட்டிருந்ததுடன் நாட்டு மக்களுக்கு விசேட உரையையும் ஆற்றியிருந்தார்.

அதனை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் நாளை வெள்ளிக்கிழமை நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்த்த்க்கது.

No comments: