எக்ஸ்-பிரஸ் பேர்ல் விபத்து : பாதிக்கப்பட்டோருக்கு இரண்டு இலட்சம் யூரோ நிதி


எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் மூலம் ஏற்பட்ட சேதங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இரண்டு இலட்சம் யூரோ (கிட்டத்தட்ட 48 மில்லியன் ரூபாய்) நிதியுதவி வழங்கியுள்ளது.

இந்த உதவி கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பேரழிவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள 15,000 பேருக்கு பயனளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமல்படுத்தப்பட்ட மீன்பிடித் தடை காரணமாக அன்றாட வாழ்வாதாரங்களை இழந்துள்ள மக்களின் உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த நிதியுதவி இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: