முல்லைத்தீவில் காணி சுவீகரிப்புக்குத் தயாராகும் கடற்படை - கனரக வாகனங்களுடன் விசேட பாதுகாப்பு!


கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை அபகரிக்கும் முயற்சிக்கு எதிரான நாளைய போராட்டத்தை தடுக்கும் வகையில் முல்லைத்தீவு வட்டுவாகலில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கடற்படையிரின் முகாமிற்கான காணி சுவீகரிப்புக்காக நாளை நில அளவைத் திணைக்களத்தினால் காணி அளவீடு மேற்கொள்ளப்படவுள்ளது.


மக்களுக்கு சொந்தமான காணியில் கடற்படையினர் தளம் அமைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் இவ்வாறான நடவடிக்கையை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.


இந்நிலையில் வட்டுவாகல் பகுதியில் விசேடமாக வீதிச்சோதனை நிலையத்தை அமைத்துள்ள அதேவேளை முகாமுக்கு முன்னால் விசேட பாதுகாப்பு கடமையிலும் சுற்றுக்காவல் நடவடிக்கையையும் கடற்படையினர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments: