கோட்டாபய கடற்படை முகாமிற்காக வட்டுவாகலில் காணி அபகரிப்பு - தடுத்து நிறுத்த சிவாஜிலிங்கம் அழைப்பு

வட்டுவாகலில் காணி அபகரிப்பைத் தடுக்க அனைவரும் ஒன்றுகூட வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.


கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை நில அளவை மேற்கொள்வதற்கு காணி உரிமையாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


குறிப்பாக வட்டுவாகலில் 617 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டது என்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் காலப் பகுதியிலும் இந்த நடவடிக்கை இடம்பெற்றதாகவும் சிவாஜிலிங்கம் குற்றம் சாட்டினார்.


மேலும் இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகளை சீனாவிற்கு விற்பதற்கான நடவடிக்கைகளே இடம்பெறுவதாக தெரிவித்த சிவாஜிலிங்கம், எனவே காணிச் சுவீகரிப்பை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் என அழைப்பு விடுத்தார்.


இதேவேளை வடக்கு கிழக்கு இணைப்பை பூலோக ரீதியாக துண்டிக்கும் முயற்சியாகவே திட்டமிட்ட சிங்களகுடியேற்றங்கள் சென்றுகொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.


No comments: