சஜித்தை இணைந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு


ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஒரு முக்கிய அழைப்பை டுத்துள்ளது.


நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன மற்றும் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோர் இந்த அழைப்பினை விடுத்தனர்.


அவரது மூதாதையர் வீட்டிற்கு திரும்பி வரவ வேண்டும். தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை காப்பாற்ற எங்களுடன் சேர வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


மேலும் மறுபடியும் கட்சியில் இணைவதற்கு வெட்கமடையத் தேவையில்லை என்றும் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டார்.


இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியில் சேர்ந்த பல உள்ளூராட்சி உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு திரும்பி வரத் தொடங்கியுள்ளதாக ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

No comments: