15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் 26 பேர் கைது


இணையம் மூலம் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்த சம்பவம் வெளிவந்ததைத் தொடர்ந்து மேலும் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி நேற்று வெள்ளிக்கிழமை (02) பிற்பகல் மேலும் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


அவர்களில் ஒரு மாணிக்க தொழிலதிபர், ஒரு கப்பலின் கப்டன் மற்றும் அவரது குழுவினர் அடங்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


ஜூன் 07 ஆம் திகதி கல்கிசையை சேர்ந்த ஒருவர் குறித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இதனை அடுத்து இந்த குற்றம் தொடர்பாக இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 16 பேர் சட்டரீதியான கற்பழிப்பு, கடத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.


கைது செய்யப்பட்டவர்களில் பாதிக்கப்பட்டவரின் தாய், மற்றொரு பெண், முச்சக்கர வண்டி ஓட்டுநர், ஒரு கார் ஓட்டுநர், விளம்பரத்தை பதிவிட்டவரும் மிஹிந்தல பிரதேச சபையின் பிரதித் தலைவர் ஆகியோர் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: