பொதுமக்களுக்கு இராணுவ தளபதி விடுக்கும் எச்சரிக்கை


திருமணங்களை நடத்தும்போது மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்காவிட்டால் புதிய கொத்தணி உருவாக காரணமாக அமைந்துவிடும் என இராணுவ தளபதி எச்சரித்துள்ளார்.


அதிகபட்சம் 150 பேர் அல்லது 25 சதவிகித இருக்கை வசதியுடன் திருமணங்களை நடத்த சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.


இருப்பினும், குறிப்பாக மேல் மாகாணத்திற்கு வெளியே உள்ள பகுதிகளில் திருமணங்கள் குறித்த எல்லைக்கு அதிமான அளவில் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


சில பகுதிகளில் திருமணங்கள் கட்டுப்பாடுகள் அல்லது வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காமல் நடத்தப்படுவதாகவும் 250 க்கும் மேற்பட்டர்கள் அழைக்கப்படுவதாகவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் ஆலோசனையை தவறாகப் பயன்படுத்தினால் நிலைமை ஆபத்தானதாக மாறும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


மேலும் நாளாந்தம் 1,500 க்கும் மேற்பட்ட நோயாளிகள் பதிவாகும் நேரத்தில், வரவிருக்கும் நீண்ட வார இறுதியில் பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

No comments: