வெளிநாடு செல்பவர்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு


வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்த விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.


அவர்கள் செல்ல எதிர்பார்க்கும் அந்தந்த நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.


பைசர் இந்த நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி என்பதானல் அவர்களுக்கு அந்த தடுப்பூசியை செலுத்துவதற்கு சுகாதார அமைச்சு அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.


அதன்படி, சுமார் 8,000 புலம்பெயர் தொழிலாளர்கள் 15 நாடுகளுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.

No comments: