மிருசுவில் படுகொலை வழக்கில் இருந்து நீதியரசர் விலகல்


மிருசுவில் படுகொலை வழக்கில் மரண தண்டனைக் கைதி சுனில் ரத்னாயக்க, ஜனாதிபதியின்  பொது மன்னிப்பில் விடுதலையானமையை சவாலுக்கு உற்படுத்திய மனுமீதான வழக்கில் இருந்து நீதியரசர் விலகியுள்ளார்.


குறித்த பொதுமன்னிப்பு தொடர்பான தீர்மானத்தை வலுவற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணை நேற்று (05) உயர் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.


நீதியரசர் முர்து பெர்ணான்டோ, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு வந்தது.


இதன்போது, நீதியரசர் முர்து பெர்ணான்டோ, தனிப்பட்ட காரணங்களுக்காக விசாரணை நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.


இதன்படி, குறித்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை செப்டெம்பர் 21 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது.

No comments: