அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இரு நாட்கள் விவாதம்


எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து நாடாளுமன்றில் இரண்டு நாட்கள் விவாதம் இடமபெறவுள்ளது.


சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


அந்தவகையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து ஜூலை 19 மற்றும் 20 திகதிகளில் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.


இதேவேளை இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வுகள் நாளை (06) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவருக்கு எதிராக கொண்டுவரப்படும் முதலாவது நம்பிக்கையில்லாத் தீர்மானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: