இலங்கையர்களுக்கான தடையை நீடிக்கின்றது ஐக்கிய அரபு இராச்சியம்


கொரோனா தொற்று அச்சம் காரணமாக இலங்கையில் இருந்து வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ஐக்கிய அரபு இராச்சியம் ஜூலை 15 வரை நீடித்துள்ளது.


இதனை தொடர்ந்து 2021 ஜூலை 15 ஆம் திகதி வரை பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் இருந்து டுபாய் செல்லும் விமானங்களை நிறுத்தி வைப்பதாக டுபாயை தளமாகக் கொண்ட விமான நிறுவனம் அறிவித்துள்ளது.


மேலும், கடந்த 14 நாட்களில் பாகிஸ்தான், பங்களாதேஷ் அல்லது இலங்கை வழியாக இணைந்த பயணிகள் வேறு எந்த இடத்திலிருந்தும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: