நயினை நாகபூசணிக்கு வருவதை தவிர்க்குமாறு பக்தர்களிடம் கோரிக்கை!

 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு வருகை தருவதனை பக்தர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென ஆலய அறங்காவலர் சபையினர் கோரியுள்ளனர்.


நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் நித்திய பூஜைகள் நடைபெறுவதாக ஆலய அறங்காவலர் சபை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.


இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அபிசேகங்கள், அடியவர்களின் நேர்த்திகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவை மீள ஆரம்பிப்பது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆகவே பக்தர்கள் அனைவரும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு ஆலயத்திற்கு வருகை தருவதனை தவிர்க்க வேண்டும் என்றும் ஆலய அறங்காவலர் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

No comments: