இராணுவதிடம் உள்ள வசதிகள் சுகாதார துறையினரிடம் இல்லை - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்


கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 3 இலட்சம் பேரின் தகவல்கள் தொடர்பிலான தரவுகள் பாதுகாப்பாக இருப்பதாக பொது சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.


சில சுகாதார ஊழியர்கள் புத்தகங்களில் தரவைப் பதிவுசெய்தனர் என்றும் அந்த தரவுகள் கணினிமயமாக்கப்படுவதற்கு கைமுறையாக வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


கடந்த வாரம், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தடுப்பூசி செலுத்தப்பட்ட 3 இலட்சம் பேரின் தரவு குறித்து கவலைகளை எழுப்பினார்.


இராணுவம் முதல் நாளிலிருந்து தரவுகளை கணினிமயமாக்கியதாகவும் ஆனால் சுகாதாரத் துறையினர் புத்தகங்களில் தரவை எழுதும் முறையை கண்டதாகவும் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்திருந்தார்.


எவ்வாறாயினும், அஸ்ட்ராசெனெகாவின் இரண்டாவது டோஸ் செலுத்தப்படும்போது இந்த சிக்கலை தீர்க்க முடியும் என்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.


இந்நிலையில் இராணுவத் தளபதியின் கவலைகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் ஹேமந்த ஹேரத், மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும்போது  இராணுவதிடம் உள்ள வசதிகள் சுகாதார துறையினரிடம் இல்லை என கூறினார்.

No comments: