டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக சினோபார்ம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் -ஆராச்சியில் கண்டறிவு


இலங்கையில் 95% க்கும் மேற்பட்டோருக்கு சினோபோர்ம் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதாகவும் டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


குறித்த தடுப்பூசி டெல்டா மாறுபாட்டிற்கும் பீட்டா மாறுபாட்டிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும் குறித்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.


இருப்பினும் அல்பா மாறுபட்டும் எதிராக குறைந்த அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியையே வெளிப்படுத்தியதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


20 முதல் 39 வயதுடையவர்களுக்கு செரோகான்வெர்ஷன் 98.9 விகிதமாகவும் 60 வயதுடையவர்களுக்கு செரோகான்வெர்ஷன் 93.3 விகிததிற்கும் குறைவாக இருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: