தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகளில் தளர்வு - புதிய அறிவிப்பு இதோ


தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகளை இன்று (10) முதல் மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இருப்பினும், மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் 14 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது மற்றும் அனுமதிக்கப்பட்ட பொது நடவடிக்கைகள் குறித்த புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியாகியுள்ளன.


புதிய அறிவிப்பின்படி, அதிகபட்சம் 150 பேருடன் திருமண நிகழ்வை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


மேலும் 50 பேருடன் 24 மணித்தியாலங்களுக்குள் இறுதி கிரியைகளை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


வழிபாட்டு தலங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை மாநாடுகள் / கருத்தரங்குகள் என்பனவற்றை 50 இருக்கைகளுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.






No comments: