ஆர்ப்பாட்டங்களில் பொலிஸாரின் கைது நடவடிக்கை : நாமல் விசனம்

 

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் பொலிஸாரின் நடவடிக்கையை தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


நல்லாட்சி அரசாங்கத்திலோ அல்லது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திலோ இந்த நடவடிக்கையை தான் என்றும் ஏற்றுக்கொண்டதில்லை என்றும் கூறினார்.


கொழும்பில் எதிர்க்கட்சியினர் மற்றும் ஆசிரியர் சங்கம் முன்னெடுத்த போராட்டங்களில் பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்த கேள்வி பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


மேலும் போராட்டங்களில் ஈடுபட மக்களுக்கு உரிமை உண்டு என்றாலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீற முடியாது என்றும் கூறினார்.


கொரோனா தொற்றினை எதிர்த்து உலகமே போராடிவரும் நிலையில் பொதுமக்கள் பொறுப்பான முறையில் செயற்பட வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.

No comments: