குர்னால் பாண்டியாவுக்கு கொரோனா: 2வது போட்டி ஒத்திவைப்பு!!


இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இந்திய அணியின் சகலதுறை வீரர் குர்னால் பாண்டியாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகிய நிலையிலேயே இன்று இடம்பெறவிருந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் மற்ற வீரர்களுக்கு பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டால் போட்டி நாளை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: