சீனப் பிரதமர் இலங்கைக்கு விஜயம்! ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பசிலுடன் பேச்சு


இலங்கை அரசாங்கத்துடனான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சீனப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி அவர் இலங்கைக்கு வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் முதல்முறையாக சீனப் பிரதமர் லீ கேஜங் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.


இந்த விஜயத்தின் போது கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் பணிகள் முன்னேற்றம் குறித்து அவர் மதிப்பாய்வு செய்யவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


விசேடமாக கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தில் சீனாவுக்கு கிடைக்கின்ற பங்கு உட்பட சார்ந்த ஆவணங்களில் சீனப் பிரதமர் கையெழுத்திடவுள்ளதாக கூறப்படுகின்றது.


இந்த விடயங்களின் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளார்.

No comments: