நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : நேற்றுமட்டும் 200ற்கும் மேற்பட்டோர் பலி


நாட்டில் நேற்று மாத்திரம் கொரோனா தொற்று உறுதியாகிய 209 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 157 ஆக அதிகரித்துள்ளது.


இதேவேளை, நாட்டில் மேலும் 4,597 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 412,370 ஆக அதிகரித்துள்ளது.


மேலும் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 351,069 ஆக உயர்ந்துள்ளது.


இந்நிலையில் 53 ஆயிரத்து 353 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

No comments: