கொரோனா தொற்று கொடிய நோய் அல்ல - எஸ்.பி.திசாநாயக்க


கொரோனா தொற்று மிகவும் அச்சமடையக்கூடிய அளவிலான கொடிய நோய் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


இன்று இடமபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், 81 விகிதமானவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டதை அறியாமல் வைரஸிலிருந்து மீண்டு வருகிறார்கள் என கூறினார்.


மக்களிடையே காணப்படும் தேவையற்ற அச்சமே இறப்புகளுக்கு முக்கிய காரணம் என்றும் அவர் அவர் சுட்டிக்காட்டினார்.


மேலும் இலங்கையில் இறப்பு விகிதம் இன்னும் 1.9 சதவீதமாக உள்ளது என்றும் எஸ்.பி. திசாநாயக்க குறிப்பிட்டார்.


இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்று உறுதியாவோரின் எண்ணிக்கை 40 வீதமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

No comments: