நெளபர் மெளலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சதி, உதவி செய்தல், வெடி பொருட்கள் மற்றும் ஆயுதங்களை சேகரித்தல், கொலை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்ற தீர்ப்பாயத்தை அமைக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரியுள்ளார்.
நெளபர் மெளலவி, சாஜித் மெளலவி, மொஹம்மட் மில்ஹான், சாதிக் அப்துல்லாஹ், கபூர் மாமா எனும் ஆதம் லெப்பை, மொஹம்மட் சம்சுதீன், மொஹமட் ரிஸ்வான் உள்ளிட்ட 25 பேருக்கு எதிராகவே இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு புனித சீயோன் தேவாலயம் உள்ளிட்ட கொழும்பில் உள்ள முக்கிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களால், 30 வெளிநாட்டவர்கள் உட்பட 268 பேர் உயிரிழந்ததுடன், 594 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
