இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் : நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !
இலங்கையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருகிறது நிலையில் நாள் ஒன்றுக்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகின்றன.
இந்நிலையில் மேலும் 118 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 340 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களின் 79 ஆண்களும் 39 பெண்களும் அடங்குவதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 2 ஆயிரத்து 904 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 35 ஆயிரத்து 851ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 2 இலட்சத்து 98 ஆயிரத்து 162 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 32 ஆயிரத்து 349 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
