முழுயாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு டிஜிட்டல் அட்டை - சுகாதார அமைச்சு


செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்டமையை உறுதிப்படுத்தும் டிஜிட்டல் அட்டை வழங்க சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.


செப்டம்பர் முதல் வாரத்தில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 75% பேர் இரண்டாவது டோஸைப் பெறுவார்கள் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.


இந்நிலையில் நாட்டில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி திட்டத்தின் அடிப்படையில் செப்டம்பர் மாதத்திற்குள் டிஜிட்டல் அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

No comments: