முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்.!


கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 65 வயதான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று காலமானார்.


கொரோனா தொற்று உறுதியாகிய நிலையில் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் மங்கள சமரவீர சிகிச்சை பெற்று வந்தார்.


1956 இல் பிறந்த மங்கள சமரவீர பல அரசாங்கங்களின் கீழ் முக்கிய அமைச்சுப்பதவிகளை வகித்திருந்தார்.


2017 முதல் 2019 வரை நிதி அமைச்சராகவும், 2005 முதல் 2007 வரை மற்றும் 2015 முதல் 2017 வரை இரண்டு முறை வெளிவிவகார அமைச்சராகவும் மங்கள சமரவீர பணியாற்றினார்

No comments: