நாடு முழுவதும் 6 மணிநேர ஊடரங்கு உத்தரவு அமுல்!


நாடு முழுவதும் இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 4.00 மணிவரை நாளாந்தம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.


மறு அறிவித்தல் வரை 6 மணிநேர ஊடரங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இந்நேரத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே செயற்பட அனுமதி வழங்க்கப்படும் என்றும் இராணுவத் தளபதி கூறினார்.


இதேவேளை நாட்டில் கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  6 ஆயிரத்தை கடந்துள்ளது.


நேற்றைய தினம் கொரோனா தொற்றினால் மேலும் 161 உயிரிழப்புகள் பதிவாகியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் ஒரே நாளில் பதிவுசெய்யப்பட்ட அதிகளவான உயிரிழப்பு சம்பவங்கள் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.


அதற்கிணங்க நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட மொத்த இறப்பு எண்ணிக்கை 6,096 ஆக அதிகரித்துள்ளது.

No comments: