அமைச்சரவை மறுசீரமைப்பு: பீரிஸ் வெளிவிவகாரம், கெஹலிய சுகாதாரம் மற்றும் தினேஷ் கல்வி...!


சுகாதாரம் மற்றும் வௌிவிவகார போன்ற அமைச்சு பதவிகளில்  சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


அதனன்படி கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், வெளிவிவகார அமைச்சராக இருந்த தினேஸ் குணவர்தன கல்வி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.


சுகாதார அமைச்சராக இருந்த பவித்ரா வன்னியாராச்சி போக்குவரத்து அமைச்சராகவும், ஊடகத்துறை அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.


அத்துடன் மின்சக்தி அமைச்சராக இருந்த டலஸ் அழகப்பெரும ஊடகத்துறை அமைச்சராகவும், போக்குவரத்து அமைச்சராக இருந்த காமினி லெகுகே மின்சக்தி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.


இதனிடையே, இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறைக்கு மேலதிகமாக, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments: