சில தளர்வுகளுடன் மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கை நீடிக்க அரசாங்கம் ஆலோசனை !!!


நாட்டினை மேலும் ஒருவாரத்திற்கு நீடிப்பதற்கு சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கடந்த 20 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி நீக்க திட்டமிடப்பட்டது.


இருப்பினும் அடுத்த மாதம் 6 ஆம் திகதிவரை நீடிக்குமாறு அரசாங்கத்திடம் சுகாதார அதிகாரிகளினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதேவேளை சில அமைச்சர்கள் பொருளாதாரத்திற்கு தாக்கம் ஏற்படும் என்பதனால் 30 ஆம் திகதியே  ஊடங்கை தளர்த்துமாறு அரச உயர்மட்டத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.


இந்நிலையில் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் கட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்கவும் ஊரடங்கை தளர்வுகளுடன் நீடிப்பது குறித்தும் அரசாங்கம் ஆராந்துவருகின்றது.


தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் நாளை இடம்பெறும் கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டு அறிவித்தல் விடுக்கப்படவுள்ளது.

No comments: