ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் திடீர் என அதிகரித்தது சீனியின் விலை!!!


நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் திடீர் என ஒரு கிலோ சீனியின் விலை 50 ரூபாயினால் அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் 160 ரூபாயாக இருந்த ஒரு கிலோ சீனியின் விலை இந்த வாரம் 210 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விலை உயர்வு நியாயமற்றது என்றாலும், அது குறித்து தன்னால்  எதுவும் செய்ய முடியாது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.


விலை அதிகரிப்பிற்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகையினை அதிகரிப்பது குறித்த சட்டம் நாடாளுமன்றின் அங்கீகாரத்திற்காக காத்திருக்கும் நிலையில் தன்னிச்சையான விலை உயர்வுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என அவர் கூறினார்.

No comments: