இன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ள புதிய சட்டம்- ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு


அத்தியாவசிய பொருள் விநியோகத்திற்கான அவசர சட்ட விதிமுறைளை இன்று (30) நள்ளிரவு முதல் அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார்.


இந்த அவசர சட்ட விதிமுறை நெல், அரிசி மற்றும் சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை, அதிக விலைக்கு விற்பது அல்லது பதுக்கி வைப்பதை தடுப்பதை  நோக்கமாக கொண்டது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


மேலும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியை அத்தியாவசிய சேவை ஆணையராக ஜனாதிபதி நியமித்துள்ளார்.


No comments: