பாராலிம்பிக் போட்டிகளில் உலக சாதனையுடன் தங்கம் வென்றார் இலங்கை வீரர் !!


டோக்கியோவில் இடம்பெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.


ஆண்களுக்கான F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத் என்பவரே இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.


குறித்த போட்டியில் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து சாதனையை படைத்துள்ள அவர், தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.


அனுராதபுரத்தில் வசிக்கும் 35 வயதான  தினேஸ் பிரியந்த ஹேரத் கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற ரியோ பாராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

No comments: